search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா நினைவிடம்"

    கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்தார். #KadamburRaju #KarunanidhiMemorial
    தூத்துக்குடி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-



    ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.

    எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.  #KadamburRaju #KarunanidhiMemorial
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Karunanidhideath #DMK
    புதுடெல்லி:

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக சார்பில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசு அதனை மறுத்து கிண்டியில் உள்ள காமராஜர் மண்டபத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது.

    அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக முறையிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

    ஆனால், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட், கருணாநிதியின் இறுதி சடங்குக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அவரை அறிவுறுத்தினர். #Karunanidhideath #DMK #SupremeCourt
    ×